திரு கோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்களால் பரபரப்பு!!

திரு கோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்த இளைஞர்களால் பரபரப்பு!!

 திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரொருவர் தனது கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் இன்று(28) நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகத் தெரிவித்து, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐவர், 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் இன்று  திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர். 

இந்நிலையில், கழுத்தை அறுத்துக் கொண்ட இருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று(28.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *