நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

நீரில் நேர்த்திக் கடன் நிறைவேற்றிய த. வெ. க உறுப்பினர்!!

 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில் த. வெ. க எம்எல்ஏ ஜலபிரதட்சணம் செய்து நேர்த்திகட நிறைவேற்றியுள்ளார்.

இந்த தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் எம்.வி கருப்பையா என்பவர் சுமார் 2,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனை வீழ்த்தி வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

விஜய் முதல்வர் ஆனால் அங்கப்பிரதட்சணம் போல ஜலபிரதட்சணம் செய்வதாக வேண்டியிருந்தார். வேண்டுதல் நிறைவேறிய நிலையில் உள்ளூர் கிணறு ஒன்றில் த.வெ.க கொடியுடன் தண்ணீரில் மிதந்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் த.வெ.க ஆட்சி அமைத்ததும் தற்காலிக சபாநாயகராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பித்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *