
இலங்கையில் மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த ஒரு போலீஸ் உத்தியோகத்தருக்கும் அதிகாரம் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் துணை பொலிஸ் அத்தியட்சகர் எப்.ஏ. வூட்லர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார் .
பொலிஸ் சீருடை அணிந்த எந்த ஒரு அதிகாரியினாலும் மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோரை ஈடுபடுபவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மோட்டார் போக்குவரத்து போலீசாருக்கு மட்டும் வரையறுக்கப்பட்டது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனியாக கடமையில் ஈடுபட்டிருந்தாலும் விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மோட்டார் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட தகவல்கள் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த, சீருடை அணிந்த ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களும் மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
