போதைப் பொருள் விற்ற இலங்கை இளைஞன் குவைத்தில் கைது!!

போதைப் பொருள் விற்ற இலங்கை இளைஞன் குவைத்தில் கைது!!

குவைத்தில் வீட்டு சாரதியாக செயற்பட்டுக் கொண்டே பெரும் அளவிலான போதைப்பொருள் விற்பனை செய்துவந்த இலங்கை இளைஞ‌ர் கைதாகியுள்ளார்.

குவைத்தில் ஃபர்வானியா மாகாணத்தில் உள்ள சபா அல் நாஸ்ர் இல் அந்நாட்டு புலனாய்வுத்துறை குவைத் பிரஜை ஒருவருடைய வீட்டில் சாரதியாகப் பணிபுரிந்த குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இவர் அர்தியா பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

வாகனத்தில் தனது முதலாளியின் குடும்பத்தினரை ஏற்றிச் செல்லும்போது கூட அவர் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தார் என்பதை கண்காணிப்பு கேமராக்கள் காட்டியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தனது வேலையின் தன்மையை தவறாகப் பயன்படுத்தி சோதனைகளில் இருந்து தப்பிப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

அவரது வாகனத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​கிரிஸ்டல் மெத் (ஐஸ்) போதைப்பொருள் அடங்கிய பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பல்வேறு அளவிலான பொட்டலங்கள் மற்றும் கவர்களில் விற்பனைக்காகத் தயாரிக்கப்பட்ட 469.1 கிராம் கிரிஸ்டல் மெத் மற்றும் 0.7 கிராம் கஞ்சாவுடன், போதைப்பொருட்களை எடைபோடப் பயன்படுத்தப்பட்ட ஒரு மின்னணு தராசு, 285.950 குவைத் தினார் மற்றும் 6,573 குவைத் தினாருக்கு போதை பொருட்கள் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் இந்த சோதனையில் கண்டெடுக்கப்பட்டன.

இந்த போதைப்பொருள் விற்பனை வெளிநாட்டில் உள்ள மற்றொரு நபருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகவும், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் குவைத் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *