மீண்டும் எரிபொருள் வரிசை!!

மீண்டும் எரிபொருள் வரிசை!!

 நாட்டில் உள்ள தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களின் கோரிக்கைகளுக்கு எரிசக்தி அமைச்சு இன்னும் நியாயமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்காததால், நிறுவனங்கள் தங்களது எரிபொருள் விநியோகத்தை மேலும் கட்டுப்படுத்தியுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, நேற்று 18ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்கும் நிலையேற்பட்டுள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியதுடன், சில எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இல்லை என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது பெரும்பாலான எரிபொருள், இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) எரிபொருள் நிலையங்களிலிருந்தே விநியோகிக்கப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்களில், சினோபெக் நிறுவனமே மிகக் குறைந்த எரிபொருளை விநியோகிப்பதாகவும், இந்த நிலையங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதாகவும் விநியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருந்தபோதிலும், எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளால் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *