வாகன பெயர் மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

வாகன பெயர் மாற்றம் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

திறந்த ஆவணங்களைப் (Open Papers) பயன்படுத்தி வாகனங்களை வாங்குவதையும் விற்பதையும் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) எச்சரிக்கை விடுத்துள்ளது.


வாகன உரிமை மாற்றத்தை 14 நாட்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டாய விதி, எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை விற்பனை செய்யும்போது திறந்த ஆவணங்களை (Open Papers) ஒப்படைக்க வேண்டாம் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதால் விற்பனையாளர்கள் சட்ட ரீதியான மற்றும் ஏனைய சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வாகன உரிமை மாற்றத்தை மேற்கொள்வதற்குத் தேவையான ஆவணங்களைச் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பித்து, 14 நாட்களுக்குள் உரிமை மாற்றத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *