
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026,ல் இரண்டாம் இடத்தில் 71.97 லட்சம் வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்திலும் உள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது.
வரலாற்றில் முக்கிய நிகழ்வாக புதிய கட்சியான தவெக இதுவரை 1.09 கோடி வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் சரிபாதியை தற்போது தவெக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
