
தமிழர் அரசியலில் மேலும் ஒரு தேர்தல் – *தமிழ்நாடு* . 234 தொகுதிகளில் நடந்த வாக்களிப்பில், திங்கள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இத்தேர்தலில் ஆண்களை விட *பெண்* *வாக்காளர்கள்* *அதிகம்* மட்டுமல்ல (2.8 கோடி ஆண்கள் – 2.93 கோடி பெண்கள்), அதிகம் வாக்களித்தும் உள்ளனர்.
இந்நிலையில் 4023 மொத்த வேட்பாளர்களில், 442 ( *11%* ) *பெண்* *வேட்பாளர்கள்* போட்டியிட்டுள்ளனர். இதில் கட்சிகள் எவ்வாறு பெண்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளனர் என்று பார்த்தால்,
நாம் தமிழர் – *117* /234 (50%) – 116 பெண்கள்+ 1 திருநங்கை
அ.தி.மு.க கூட்டணி – *29* /234 (12.4%)
தி.மு.க கூட்டணி – *26* /234 (11.1%)
தமிழக வெற்றிக் கழகம் (தன்.வெ.க) – *24* /234 (10.3%)
ஆண்கள் அதிகம் போட்டியிட்ட கட்சிகள் –
த.வெ.க – *209* /233 (89.7%)
தி.மு.க கூட்டணி – *208* /234 (88.9%)
அ.தி.மு.க கூட்டணி – *205* /234 (87.6%}
நாம் தமிழர் – *117* /234 (50%)
சரி, தமது வேட்பாளர்களில் எவ்வாறு தகுதியானவர்களை ( *கல்வித்* *தகமை* ) கட்சிகள் நியமித்துள்ளன எனப் பார்த்தால், *முனைவர்* *பட்டம்* பெற்றவர்கள் (PhD)
நாம் தமிழர் – *14* /234
தி.மு.க – *6* /176
த.வெ.க – *6* /233
பா.ஜ.க – *3* /33
கட்சிகளில் போட்டியிட்டவர்களில், குறைந்த பட்சம் *இளங்கலை* (Bachelor’s degree) பட்டமாவது பெற்றவர்கள்,
நாம் தமிழர் – *187* /234 (14 முனைவர், 60 முதுமாணி, 113 இளங்கலை)
தி.மு.க கூட்டணி – *148* /234 (8 முனைவர், 38 முதுமாணி, 102 இளங்கலை)
த.வெ.க – *120* . /233 (6 முனைவர், 43 முதுமாணி, 71 இளங்கலை)
அ.தி.மு.க – *84* /172. (84 இளங்கலை)
சரி, கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி வயது என்ன?.
இளையவர்களின் கட்சி என்கிறார்கள் அனைவரும், அது உண்மையா? வாருங்கள் பார்ப்போம்!
அ.தி.மு.க கூட்டணி சராசரி வயது – *57*
தி.மு.க கூட்டணி சராசரி வயது – *56*
த.வே.க சராசரி வயது – *45*
நாம் தமிழர் – *38*
தமிழ் சமூகமாக எங்கள் அரசியல் எங்கிருக்கிறது? என்ற உங்கள் சிந்தனைக்கு இத்தகவல்கள் உதவலாம்.
