
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அதன்போது 5 என்பு கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டுத் தொகுதி உட்பட 2 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 255 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 249 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண்ணிற்குள் இருந்து எரிந்த நிலையில் சில என்புகளும், நாணய குற்றிகளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் மூக்குத்தி போன்றதான உடைந்த நிலையிலும், சிறிய தங்க ஆபாரணம் ஒன்றும், சில நாணய குற்றிகளும், மரப்பெட்டி ஒன்றின் சிதைவுகள், ஆணிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் என்பு கூட்டு தொகுதி நேரடியாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால், அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி பக்குவப்படுத்த மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்படதாக சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
