பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்துத்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் உணவுக் கண்காட்சி!! 

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் போசக்கு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட  உணவுக் கண்காட்சி இன்றைய தினம் பருத்தித்துறையில் தனியார் விடுதி ஒன்றில்  உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்தியரூபன் தலைமையில் இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள்  மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பவற்றை  தொடர்ந்து  தலைமையுரையினை உதவி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சூரிகா சத்யரூபன் நிகழ்த்தினார்.  தொடர்ந்து உணவுக்  காட்சியை  விருந்தினர்கள் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து அயல் பாடசாலை மாணவர்கள் நூற்றுக் கணக்கில் ஆர்வத்துடன்  பார்வையிட்டு வருகின்றனர். 

இந் நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வின்சென்ட் டி போல் டக்ளஸ் போல்,  வல்வெட்டிதுறை நகர சபை உப தவிசாளர் திரு. பத்மநாதன், பாடசாலை அதிபர்கள், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள் மற்றும் ஊழியர்கள்,   மற்றும் அதிகாரிகள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவர்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். கண் காட்சியை  வடமராட்சி பகுதியில் உள்ள பல பாடசாலைகளின்  மாணவர்கள் குறித்த கண் காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *