பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

பற்றி எரியும் மருதங்கேணி சவுக்கு காடு!!

 நேற்றைய தினம் யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில்  ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுவதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நேற்றைய தினத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற்கொண்டு, தீயை விரைவாக கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் ஊடாக உலங்குவானூர்தி மூலம் தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டுள்ள பகுதியின் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், தீ மேலும் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *