தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் மீது தாக்குதல் – ஏற்பட்ட பெரும் சேதம்!!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவரின்  வீட்டிற்குள் நள்ளிரவில் மதுபோதையில் நுழைந்ததாகக் கூறப்படும் வடமராட்சி தெற்கு மேற்கு  பிரதேச சபை உறுப்பினர் கணேசரூபன் மற்றும் அவரது குழு, வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி மிரட்டியுள்ளனர்.

119 அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்த நெல்லியடி போலீசார் குறித்த நபரை  செய்து அதிகாலை 12:45 மணியளவில் கைது செய்திருந்த நிலையில் காலை 7:00 மணியளவில்   அரசியல் அழுத்தம் காரணமாக  பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளனர்.  

எதிர்வரும் 01/09/2026 அன்று நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறே பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளதாகவும் வீடு புகுந்து அச்சுறுத்தி பொருட்களுக்கு சேதம் விளைவித்த ஒருவருக்கு போலீசாரால்  பிணை வழங்க முடியாது என்றும் போலீஸ் பிணை வழங்கியது அரசியல் அழுத்தம் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.குறித்த npp உறுப்பினருடன் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவரும் சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *