சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தேக நபர் கைது!!

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட சந்தேக நபர் கைது!!

 இலங்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஷெஹான் சத்சர என்ற “தெஹிபாலே மல்லி”யின் இளைய சகோதரரான பட்டபெதிகே துஷான் சத்சர என்ற “களு மல்லி” என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமையவே குறித்த சந்தேகநபர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபருக்கு எதிராக, தென் மாகாணத்தில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இன்டர்போல் (சர்வதேச பொலிஸ்) மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *