
பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த இரகசியங்களை கசிய விட வேண்டாம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் பெறப்படும் தகவல்களை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் சமூக பொலிஸ் சேவையை மேலும் பலப்படுத்துவதில் அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் கூடியபோதே இது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒழிக்கும் பொலிஸாரின் பணிகளுக்கு பொதுமக்களின் ஆதரவை அதிகளவில் பெற்றுக்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
