பாண் விற்பனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

பாண் விற்பனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதிலுமுள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் உட்பட 118 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பாணின் சரியான எடை பேணப்படுகிறதா என்பதும், எடை மற்றும் விலை சரியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெற்றுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கைகளின்படி, எடைக் தகவல்கள் பெறப்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளின் அடிப்படையில் 54 நிறுவனங்களில் எடை குறைந்த பாண் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கை மற்றும் அவற்றின் மூலம் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு பாண் விநியோகிக்கப்படும் விதம் குறித்துப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு முழுப் பாண் 450 கிராமும், அரைப் பாண் 225 கிராமும் கொண்டிருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

பாணின் எடை, விலை அல்லது ஏனைய வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் உடனடி அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *