பல மில்லியன் பெறுமதியான சொத்துகள் முடக்கம்!!

பல மில்லியன் பெறுமதியான சொத்துகள் முடக்கம்!!

 புத்தளம், கட்டூனேரிய பகுதியில் அமைந்துள்ள 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பிரமாண்டமான வீடு மற்றும் காணி என்பன சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் அடா மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தில் இந்தச் சொத்துக்கள் ஈட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

இது தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சொத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின் பின்னர் குறித்த சொத்துக்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *