30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

30 ஆண்டுகளுக்கு பின்னர் யாழின் முக்கிய பகுதியில் இருந்து வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ளனர்.நேற்றிரவு (23) குறித்த முகாமை விட்டு வெளியேறிய இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்த கடிதத்தை, 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்துள்ளார்.அதேபோன்று பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த பகுதியில் நீண்ட நெடுங்காலமாக முகாமிட்டு குடிகொண்டிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு நீண்ட காலப்பகுதி தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *