உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

உறுதியான வீட்டினால் உயிர் தப்பிய குடும்பம் – நேபாளத்தில் சம்பவம்!!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பேரழிவின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வெள்ளத்தில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பலர் உயிரிழந்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாரிய அழிவுக்கு மத்தியில் ஒரு குடும்பம் உயிர் தப்பிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வேகமாகப் பாய்ந்த வெள்ள நீரால் சூழப்பட்ட பச்சை நிற வீடொன்றின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.

அந்த வீட்டிற்குள் குடும்பமொன்று சிக்கியிருந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கவலை வெளியிட்டனர். வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியபோது, வீட்டைச் சுற்றியிருந்த பல கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

எனினும், கடுமையான வெள்ளப்பெருக்கையும் தாக்குப்பிடித்து குறித்த வீடு மட்டும் நிலைத்து நின்றது. இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டின் உறுதித்தன்மை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் ஆச்சரியப்பட்டனர்.

அருகிலிருந்த கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், இவ்வளவு சக்திவாய்ந்த வெள்ளத்தையும் அந்த வீடு எவ்வாறு தாக்குப்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பினர்.

பின்னர் வெளியான மற்றொரு காணொளியில், வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த இரண்டு காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *