செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறுத்தம்!!

 செம்மணி – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன்(24.07.2026) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு , எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 42ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 01 என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , என்புக்கூட்டு குவியலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 15 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மூன்று என்புக் கூட்டு குவியல்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் 437வது என்புக்கூட்டின் வலது பக்க மூன்று விலா எலும்புடன் தொடுகையுற்றவாறு இரும்புத்தகடு அடையாளம் காணப்பட்டதுடன், சில ஆணிகளும் சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணிப் புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 96 நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 480 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 479 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *