திருகோண மலையில் யானைத் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு!!

திருகோண மலையில் யானைத் தாக்கத்தால் உயிரிழப்பு அதிகரிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 யானைகளும், 15 மனித உயிர்களும் பலியாகி உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஹேமந்த குமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற யானை – மனித மோதல் தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் கலந்துரையாடலின்போது சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அவர் இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளார்.

மேலும் மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யானைகளின் உயிரிழப்புகளையும், மனித உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்தப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஏழு ஆண்டுகளில் இடம்பெற்ற யானை – மனித மோதல்களினால் 166 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 75 மனிதர்கள் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *