

அமரர் சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனர், சி.அ.யோதிலிங்கம் அவர்களின் 45 ம் நாள் நினைவேந்தல் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 21/11/2026 காலை 9:00 மணியளவில் யாழ்ப்பாணம் சட்டநாதர் கோயில் அருக்காமையுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முதுநிலை அரசறிவியல்துறை பேராசிரியரும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநர்களில் ஒருவருமான கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக அமரர் யோதிலிங்கம் அவர்களின் திரு உருவ படத்திற்கு அவரது மருமகன் ஊடகவியலாளர் கிரிஷாந்த் ஈகை சுடர் ஏற்றி வைக்க மலர் மாலையினை அவரது சகோதரி அணிவித்து வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்
அதனை தொடர்ந்து தலைமை உரையினை சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனர்களில் ஒருவரும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முது நிலைப் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் நிகழ்த்தினார்.
நினைவுரைகளை
தவத்திரு வேலன் சுவாமிகள், வணக்கத்திற்குரிய வசந்தன் அடிகளார், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அரசியல் சமூக ஆய்வாளர் வா. நிலாந்தன், தமிழ் மக்கள் கூட்டணி உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சட்ட ஆலோசகர் ந. காண்டீபன், கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம், மகளிர் சிறுவர் உரிமைகள் செயற்பாட்டாளர் வாசுகி சுதாகரன், உட்பட பலரும் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து
சமகால நெருக்கடிகளும் அவற்றை சமூகமாக எதிர்கொள்வது எப்படி எனும் தலைப்பில் சமூக ஆய்வாளர் தி.மதுசூதனன், அவர்களும், சமகால அரசியலில் ஈழத் தமிழர்களும், இலங்கை முஸ்லிம்களும் எனும் தலைப்பில் தென் கிழக்கு பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் எம்.எம்.பவுசர் அவர்களும், மலையக மக்களின் சமகால அரசியல் எனும் தலைப்பில் ஆசிரியரும், தொழிற்சங்க பிரதிநிதியுமான
வேலு இந்திரசெல்வன் அவர்களும், உரை நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் அமரர் சி.அ.யோதிலிங்கம் அவர்களது உறவுகள், நண்பர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்
இதேவேளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமா வளவன் அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்
