
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளைய தினம் முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
