நாமலைச் சந்திக்க சிறைக்குச் சென்றார் மகிந்த!!

நாமலைச் சந்திக்க சிறைக்குச் சென்றார் மகிந்த!!

 கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சவை நேரில் சென்று சந்தித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நாமலின் கைது ஒரு பழிவாங்கும் செயலாக இருக்கக்கூடும் அல்லது இல்லாமலும் போகலாம், இச்சூழ்நிலையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளவுள்ளோம்.

எதிர்வரும் தினங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நாமல் ராஜபக்‌சவிற்குப் பிணை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம். 

ஒரு அரசியல் தலைவராக இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு நாமல் ராஜபக்‌ச இதற்கு முன்னரும் முகங்கொடுத்துள்ளார், இது தமக்கு ஒரு புதிய விடயம் அல்ல. 

இக்கைதினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது, இச்சம்பவம் கட்சி மேலும் வலுப்பெற்று முன்னோக்கி நகர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே அமையும்” என குறிப்பிட்டுள்ளார். 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *