பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

பஷில் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – அதிரடி கருத்து தெரிவித்தார் மகிந்த!!

  அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கை வருவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்ளத்ளார்.

 பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியாணை மற்றும் வழக்கு விசாரணைக்கு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,

“பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” எனவும் பசில் ராஜபக்ச நாட்டுக்கு வருவதும் தனக்குத் தெரியாது, நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதும் தெரியாது என்றும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களில் ஈடுபடும் வேலையை மாத்திரமே செய்து வருவதாகவும், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பலமான கூட்டணியாக ஒன்று சேர்ந்து அடுத்த ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஊடகங்களிடம் சுட்டிக்காட்டினார்.  

நேற்றைய தினம், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *