வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

வங்கியில் கணக்கு பேணுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட வங்கிக்கணக்கை வெளியாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில்,

ஒருவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் நிகழும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அவரே பொறுப்பு என்று கூறியுள்ளது.

சிலர் சிறிய மாதாந்திர கட்டணத்திற்கு தங்களது வங்கிக்கணக்கை வாடகைக்கு விட முன்வருகின்றனர். அவ்வாறு வாடகைக்கு விடப்பட்ட கணக்குகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இவ்வாறான சூழல் ஏற்படுமாயின் மற்றவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீங்களும் சட்டப்படி பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எச்சரித்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *