
கொழும்பு – காலி வீதியில் கல்தூள் கொட்டியதில் பலர் வீதியில் வழுக்கி விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த லொறி ஒன்றில் இருந்தே இவ்வாறு கல்தூள் கொட்டியுள்ளது.
குறித்த இடத்தில் ஒரு வழிப்பாதை மூடப்பட்டதாக கூறப்படுகிறது. வீதியின் சுமார் 800 மீற்றர் தூரத்திற்கு இவ்வாறு கல் தூள் கொட்டியுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
