பாரதிராஜா அவர்களின் மறைவு – ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!!

பாரதிராஜா அவர்களின் மறைவு – ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி, நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லோரன்ஸ் தனது வாழ்க்கையின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார்.


இது குறித்து தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், தனது வாழ்க்கையின் முக்கிய முடிவொன்றை வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு அறிவிப்பதாக முன்னதாகத் தெரிவித்திருந்ததை நினைவூட்டியுள்ளார்.

பாரதிராஜாவின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், இந்த இழப்பு தனது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்தது போன்ற தனிப்பட்டதொரு சோகமாகத் தனக்கு உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், பாரதிராஜாவின் மீதான மதிப்பு மற்றும் சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, தனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். அதன்படி வரும் வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும் என ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். 

 திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸை, முதலமைச்சர் விஜய் நிற்க வைக்க திட்டமிட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது ஜூன் 11ம் தேதியான நாளை இது தொடர்பான அறிவிப்பு வெளியிடுவதாக ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அதனை பிற்போட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *