வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபை முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது!!

வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஆராய்ந்த வவுனியா நீதவான் நீதிமன்றம், வவுனியா மாநகரசபையின் முன்னாள் மேயர் சு. காண்டீபன் உட்பட நால்வரைக் கைது செய்து உடனடியாக நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *