ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதில் மத்திய கிழக்கில் பதற்றம்!!

ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதில் மத்திய கிழக்கில் பதற்றம்!!

 சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒரு நிதி மையத்தை குறிவைத்து தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஏமனின் ஹவுதி ஆயுத படைகள் அறிவித்துள்ளனர்.

ஏமனில் உள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது சவூதி அரேபியா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூத்தி இராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரியா கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஏமனின் மத்திய இப் மாகாணத்தில் சவூதி நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும், ஹவுதி தாக்குதல்கள் குறித்த செய்திகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

மேலும் ரியாத் மற்றும் தெற்கு சவூதி அரேபியாவை குறிவைத்த இரண்டு ஹவுதி ஆளில்லா விமானங்களை வெற்றிகரமாக அழித்ததாக சவூதி அரேபியா கூறியுள்ளது.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவூதி ஆதரவு ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வரும் வேளையில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் சவூதி போர் விமானங்கள் சாடா, தைஸ், லஹ்ஜ், அல்-ஜவ்ஃப் மற்றும் மரிப் ஆகிய மாகாணங்களில் உள்ள பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் 75 வான்வழி தாக்குதல்களையும் ஏவுகணை தாக்குதல்களையும் நடத்தியதாக ஹவுதி இராணுவ பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *