கரவெட்டி பிரதேச சபையினரின் அதிரடி – பழுதடைந்த மீன்களை விற்றவர்கள் கைது!!

கரவெட்டி பிரதேச சபையினரின் அதிரடி – பழுதடைந்த மீன்களை விற்றவர்கள் கைது!!

 யாழ்ப்பாணம்- உடுப்பிட்டி சந்தையில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்வதாக மக்கள் பிரதேச சபையினரிடம் முறைப்பாடு அளித்தனர்.

பழுதடைந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் முறைப்பாடுகளை முன்வைத்ததை தொடர்ந்து  இன்று காலை அதிரடியாக தவிசாளர் உப தவிசாளர் உறுப்பினர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும்  பிரதேச சபை உத்தியோகத்தர்களால் அங்கு திடீர் பரிசோதனை மேற்கோள்ளப்பட்டது.

இதன் போது நான்கு வியாபாரிகளிடம் இருந்து 30 கிலோ வரையான மீன்கள் மற்றும் றால்கள் என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *