காகங்களுக்கு பயந்து மரத்தை அழித்தாரா மகிந்த!!

காகங்களுக்கு பயந்து மரத்தை அழித்தாரா மகிந்த!!

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், காகங்களை கண்டு அச்சமடைந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் உடற்பயிற்சிக்காக நடைபயிற்சியில் ஈடுபடும் பாதையில் காகத்தின் எச்சங்களை அகற்றிச் சுத்தம் செய்யும் பணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் சரத் கொடகமவுடன் கெமுனு ஜயந்த வன்னிநாயக்க தனது யூடியூப் தளத்திற்காக நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

ஹுனுபிட்டிய கங்காராமைக்கு அருகிலுள்ள நடைபயிற்சி பாதையின் இருபுறமும் உள்ள பெரிய மரங்களை வெட்டி அகற்றுவது குறித்து பாதுகாப்புப் படையினர் தன்னிடம் ஆலோசனை கேட்டதாக பேராசிரியர் சரத் கொடகம வெளிப்படுத்தினார்.

அந்த மரங்களில் தங்கும் காகங்கள் எச்சமிடுவதால் ஏற்படும் நிலைமை, அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடற்பயிற்சிக்கு இடையூறாக அமைந்ததே இதற்குக் காரணமாகும்.

எனினும், அந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்குப் பதிலாகத் தனது தலையீட்டின் மூலம் காகங்கள் அமரும் கிளைகளை மட்டும் அகற்றி மரங்களைப் பாதுகாக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *