கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

கிளிநொச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் – வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம். பி!!

 கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.

 கூட்டத்தில் அடாவடி செய்த அர்ச்சுனா எம்பியை  பொலிஸார்  கூட்டத்தில் இருந்து   இழுத்து வெளியேற்றியுள்ளனர்.

இன்றைய தினம்(16.07.2026) கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறிய கருத்துக்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

திருவையாறு பகுதியில் லால் காந்தவால் நடப்பட்ட தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஏற்படுத்திய சர்ச்சையை அடுத்து தொடர் வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் குறித்த சம்பவத்திற்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் உடந்தையாக செயல்படுகிறார் என அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகத்தார்.

கூட்டத்தில் இருந்த சிறிதரன் எம் பி வெளியேறிய நிலையில் , அமைச்சர் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை வெளியேறிச் செல்லுமாறு கூறிய நிலையில், அமைச்சர் சந்திரசேகருக்கும், அர்ச்சுனா எம்.பிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால் அர்ச்சுனா எம்.பியை கூட்டத்தில் இருந்து வெளியே அழைத்துச் சென்றுள்ளனர எனத்தெரியவருகிறது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *