கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!!

கிளிநொச்சி – கல்லாறு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!!

கிளிநொச்சி கல்லாறு கத்தோலிக்க தேவாலயம் அருகே 6.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின், கல்லாறு பகுதியைச் சேர்ந்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர், கல்லா கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 11:45 மணியளவில் மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில் தேவாலயப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த உரப்பை ஒன்றைக் காவல்துறையினர் மீட்டனர். அந்த உரப்பையைச் சோதனையிட்டபோது, அதில் 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.எனினும் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. தப்பிச் சென்ற நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்களை கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளனர்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *