தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியானது!!

தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் விபரம் வெளியானது!!

ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஐவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழ் யுவதி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்தில் நச்சு புகையை சுவாசித்த பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, தெனியாய, கொலவெங்கமவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார, அட்டகலம்பன்ன, கௌடாவவவை சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான், மஸ்கெலியாவை சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி, பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியோ எட்வர்ட் தெனியாய, கொலவெங்கமவை சேர்ந்த திலீத் மதுஷங்க ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு, மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலை கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் உட்பட பல அவசியமான அனுமதிகளைப் புதுப்பிக்கவில்லை என்ற விடயம் தற்போது வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *