ஜேர்மனியிலும் இலங்கையிலுமாக அவதிப்படும் குடும்பம்!!

ஜேர்மனியிலும் இலங்கையிலுமாக அவதிப்படும் குடும்பம்!!

 ஜெர்மனியில் நாடு கடத்தப்படுவதைத் தடுக்கும் கால அவகாசம் முடிவுக்கு வரும் நிலையில், இலங்கை குடும்பம் ஒன்று அரசியல் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து வெளியேறிய இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது நான்கு சிறுபிள்ளைகளை நாடு கடத்துவதற்கு, மாநில அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் 10 நாட்கள் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடைக்காலம் தற்போது முடிவுக்கு வரவுள்ள நிலையில், இது ஜெர்மனியில் பெரும் அரசியல் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 16ம் திகதி அதிகாலை 5:45 மணிக்கு லெவர்குசென்-ஓப்லாடன்(Leverkusen-Opladen) பகுதியில் வசித்து வந்த ரவூப் (Rouf) குடும்பத்தினரின் வீட்டின் கதவை, குடிவரவு அதிகாரிகள் மற்றும் பொலிசார் பலவந்தமாக உடைத்து உள்ளே நுழைந்தனர்.

சில மணிநேரங்களிலேயே, குடும்பத் தலைவரான முகமது ரவூப் மற்றும் அவரது 19 வயது மகள் ரம்லா ஆகியோர் இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனால், தாய் சம்சுல் ரவூப் மற்றும் அவர்களது மற்ற நான்கு குழந்தைகளான ருஹைம் (15), ரஸ்கா (13), ரையான் (7) மற்றும் ரஃபான் (6) ஆகியோர் ஜெர்மனியிலேயே தங்கிவிட்டனர்

இதில் இளைய குழந்தைகளில் இருவர் ஜெர்மனியிலேயே பிறந்தவர்கள் ஆவர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது, ​​15 வயதான ருஹைம் பாடசாலைச் சுற்றுலாவுக்காக பெர்லினுக்குச் சென்றிருந்தார்.

தனது குடும்பத்தினர் நாடு கடத்தப்படுவதை அறிந்த அவர், திரும்பும் வழியில் டூயிஸ்பர்க்கில் (Duisburg) உள்ள ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தார்

இந்த நிகழ்வு அவசர அரசியல் தலையீட்டிற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக அவரது தாயும் உடன்பிறப்புகளும் நாடு கடத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது ஜெர்மனி மற்றும் இலங்கை என இரு கண்டங்களுக்கு இடையே பிரிந்துள்ள இந்தக் குடும்பத்தினர், கடுமையான மருத்துவ, கல்வி மற்றும் உளவியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *