தனியாக வாழும் முதியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

தனியாக வாழும் முதியவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

 தனியாக வசிக்கும் முதியவர்களை இலக்காகக் கொண்டு பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

எனவே, அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக பிள்ளைகள் வேலைக்குச் செல்லுதல், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் அல்லது வேறு மாகாணங்களுக்குச் செல்லுதல் காரணமாக தனிமையில் வசிக்கும் முதியவர்களை, குற்றவாளிகளின் இலக்காக மாறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சில கொள்ளைச் சம்பவங்கள் கொலைகளாகவும் மாறியுள்ளதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர்: வீட்டு உதவியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை பணியமர்த்துவதற்கு முன் அவர்களின் பின்னணியைச் சரிபார்த்து பொலிஸ் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுதல்

அருகிலுள்ள பொலிஸ் நிலையம், 119 அவசர பொலிஸ் சேவை, 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட அவசர தொலைபேசி இலக்கங்களை வீட்டில் தெளிவாகக் காட்சிப்படுத்துதல்.

தனியாக வசிக்கும் முதியவர்கள் குறித்து கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக பொலிஸ் குழுவினருக்கு அறிவித்தல். குடும்பத்தினரின் தொலைபேசி இலக்கங்கள் பதிவு செய்யப்பட்ட எளிதில் பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளை வழங்குதல்.

அயலவர்களுடன் நல்லுறவைப் பேணுதல் மற்றும் அறிமுகமற்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்த்தல்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *