தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு – நாமலுடன் கைகோர்க்கப்போகிறாரா ரணில் – அச்சத்தில் இருக்கிறதா சஜித் தரப்பு?

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு – நாமலுடன் கைகோர்க்கப்போகிறாரா ரணில் – அச்சத்தில் இருக்கிறதா சஜித் தரப்பு?

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துள்ளனர்.

சந்திப்பின் போது அரசியல் தொடர்பான கலந்துரையாடலொன்றையும் நடத்தியுள்ளனர்.

சமகால அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மட்டும் பேசுவது போதுமா என்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று குறித்தும் உறுப்பினர்கள் தீவிரமாக விவாதித்துள்ளனர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “சஜித்துடன் அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல முடியாது” என்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளதாக உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் என்ற ரீதியில் இது குறித்து சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சஜித், இது குறித்து அவ்வளவாக பதற்றமடையத் தேவையில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறியதாக தெரியவருகிறது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்முடன் பயணிப்பதை விட, நாமல் ராஜபக்சவுடன் பயணிப்பதற்கே முயற்சிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்

ஏனெனில், இந்த பயணத்தை இளைஞருடன் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் எனக் குறிப்பிடுவதன் மூலம் அவர் மறைமுகமாக நாமலுடன் பயணிப்பதையே விரும்புவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எப்படியிருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்வது  சிறப்பானது என்பதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் விருப்பமாக உள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *