போலி வெடிகுண்டு மிரட்டலால் அவதிப்படும் பாடசாலைகள்!!

போலி வெடிகுண்டு மிரட்டலால் அவதிப்படும் பாடசாலைகள்!!

 ஐரோப்பிய நாடுகளின் பாடசாலைகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாலி,பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளில் உள்ள பல பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனால்,இத்தாலியில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர்.

ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசிலும் இதேபோன்ற மிரட்டல்கள் கிடைத்துள்ளன.எனினும், அவை போலியானவை என விரைவில் உறுதிப்படுத்தப்பட்டதால் அங்கு கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை.

இத்தாலிய பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, இந்த மிரட்டல்களால் எவ்வித ஆபத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

யுக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகளில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் ரஷ்யா இருக்கலாம் என சில ஐரோப்பிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனினும், ரஷ்யா இதனை மறுத்துள்ளது. இதேவேளை, பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகளை முடக்கிய சைபர் தாக்குதலுடன் ஈரானுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை ஈரான் மறுத்துள்ளது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *