முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

முக்கிய செய்திகளின் சுருக்கம்!!

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக, கொழும்பு நுண்கலைப் பல்கலைக்கழகம் இரண்டு வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகள், தேர்வுகள் மற்றும் விடுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 13 அன்று பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்​தின் 5 ஆம் வகுப்பு பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்த இந்​திப் படத்​தின் பாடல் தவறு​தலாக இடம்​பெற்​றுள்​ளமை சர்ச்​சையை எழுப்​பி​யுள்​ளதுடன் பள்​ளிப் பாடப்​புத்​தகத்​தில் சினிமா பாடல் அச்​சிடப்​பட்​டதற்கு கடும் கண்​டனங்கள் எழுந்​துள்​ளன.

ஒடிசா மாநிலத்​தில் அண்​மை​யில் 5 ஆம் வகுப்பு மாணவர்​களுக்​கான அரசுப் பாடப் புத்​தகங்​கள் வெளி​யிடப்​பட்​டன. இந்​நிலை​யில் இந்​தப் பாடப்​புத்​தகத்​தில் நடிகை ஐஸ்​வர்யா ராய் நடித்து 1999 இல் வெளி​யான `ஹம் தில் தே சுகே சனம்` என்ற படத்​தின் பாடல் இடம்​பெற்​றுள்​ளது.

பள்ளி மாணவர்​கள் பயிலும் பாடப் புத்​தகத்​தில் திரைப்​படப் பாடல் அச்​சிடப்​பட்​டது எப்​படி என்று கல்​வி​யாளர்​கள் உள்​ளிட்ட பலரும் கேள்வி​கள் எழுப்பி வரு​கின்​றனர்.

இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படாது இயங்கி வரும் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் தொடர்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள், உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என தேசிய முதியோர் செயலகம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் தொடர்பாக தற்போது விசேட கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டு வருவதாகவும் இதுவரை தமது விபரங்களை வழங்காத இல்லங்களின் உரிமையாளர்கள் அல்லது நிர்வாகத்தினர், தேசிய முதியோர் செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் விபரங்களை உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான யுத்தத்தின் போது எரிபொருள் விலைகள் உச்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது நிலவும் அமைதியான சூழலின் காரணமாக இவ்வாறு விலைகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *