
எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள கிராமங்கள், விவசாய அமைப்புகள், கால்நடைப் பண்ணையாளர்கள் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் இப்போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இது ஒரு சிலருடைய பிரச்சினை மட்டுமல்ல; எமது மக்களின் வாழ்வாதாரம், கால்நடைப் பண்ணையாளர்களின் உரிமைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான பொதுவான பிரச்சினையாகும்.
எனவே, ஒவ்வொரு அமைப்பும் தங்களால் இயன்றளவு பெருந்திரளான மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் பங்கேற்கச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எமது உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுப்போம்!
இந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது.
*ஒன்றிணைவோம்! குரல் கொடுப்போம்! உரிமைகளை வென்றெடுப்போம்!
நன்றி
