ஹக்கர்கள் மூலம் 400 மில்லியன் தொகை அபகரிப்பு!!

ஹக்கர்கள் மூலம் 400 மில்லியன் தொகை அபகரிப்பு!!


 வடகொரியாவுடன் தொடர்புடைய ஹேக்கர்கள், போலி காணொளி அழைப்புகளைப் பயன்படுத்தி கடந்த 18 மாதங்களில் 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கிரிப்டோ நாணயங்களைத் திருடியுள்ளதாக FBI தெரிவித்துள்ளது.

FaceStealer எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் 900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிரிப்டோகரன்சி மற்றும் Web3 துறைகளில் பணியாற்றுபவர்களே பிரதான இலக்குகளாகக் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

Zoom, Microsoft Teams, Google Meet போன்ற தளங்களின் போலி பதிப்புகள் மூலம் ஹேக்கர்கள் அழைப்புகளை மேற்கொள்கின்றனர். 

அழைப்பின் போது ஒலி பிரச்சினையைச் சரிசெய்யுமாறு கூறி, சந்தேகத்திற்கிடமான இணைப்பொன்றைக் கிளிக் செய்யுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் தூண்டுகின்றனர்.

அந்த இணைப்பின் மூலம் கணினிகளில் தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவி, தொடர்புப் பட்டியல் மற்றும் செயலிகளுக்கான அணுகலைப் பெறுகின்றனர்.

மேலும், காணொளி அழைப்புகளை ரகசியமாகப் பதிவு செய்து, அவற்றைப் பயன்படுத்தி புதிய நபர்களையும் மோசடியில் சிக்க வைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப அறிவும் இணையப் பாதுகாப்பு அனுபவமும் உள்ளவர்கள் கூட இத்தகைய மோசடிகளில் சிக்கக்கூடும். எனவே, சந்தேகத்திற்கிடமான காணொளி அழைப்புகளில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *